எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம். அந்தப் பிரதானமான தலைப்பகுதிக்கு அழகு சேர்ப்பது தலைமுடி. இந்தப் புத்தகம், தலைமுடி குறித்து பல்வேறு விஷயங்களையும், தகவல்களையும் அள்ளித் தருகிறது. தலைமுடி ஏன் கொட்டுகிறது? தலைமுடி நரைப்பது ஏன்? பொடுகு, பேன் தொல்லைகள் தீர என்ன செய்வது? எந்த ஷாம்பூ நல்லது? தலைமுடிக்கு எந்த வகை டை அடிக்கலாம்? என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான சந்தேகங்களுக்கும், கேள்வி-களுக்கும் சித்த மருத்துவ முறையில் தீர்வுகளும், எளிய குறிப்புகளும் சொல்லப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தை உங்கள் வீட்டில் இருக்கும் ‘நவீன அழகுக் கலை நிலையம்’ என்று சொல்லலாம்.