காதைப் பாதிக்கக்கூடிய நோய்கள் என்னென்ன? மூக்கில் இருந்து ரத்தம் வருவதேன்? தொண்டையில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன? ஃபுளூ, டான்சில்ஸ் போன்ற பிரச்னைகள் எதனால் ஏற்படுகின்றன? தொண்டையைப் பாதுகாப்பது எப்படி? என்பது போன்ற, இந்த மூன்று உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளும் அவற்றுக்கான தீர்வுகளும் இந்தப் புத்தகத்தில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. காது, மூக்கு, தொண்டை தொடர்பான சில பொதுவான கேள்விகளுக்கும் விடை தரும் இந்தப் புத்தகம், அவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது.