ஆயிரம் அல்ல, லட்சம் அல்ல, பல கோடிப் பிரதிகள் விற்கும் புத்தகங்களை எழுதுபவர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இவர் எழுதி வெளியாகும் எந்தப் புத்தகமும், உலக அளவில் அதிகமாக விற்கும் புத்தகங்கள் பட்டியலில் உடனடியாக இடம் பிடித்துவிடும். ஆர்ச்சரின் இந்தப் புத்தகம் பல கதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. இவற்றுள் இரண்டே இரண்டு மட்டும்தான் முற்றிலும் கற்பனை. மீதி அனைத்தும் உண்மையில் நடந்தவை. சம்பவங்களில் ஈடுபட்டவர்களே ஆர்ச்சரிடம் தங்கள் கதையைச் சொல்ல, அவற்றுக்கு மெருகூட்டி, வடிவத்தை சற்றே மாற்றி அவர் நமக்குத் தருகிறார். ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு எதிர்பாராத திருப்பம் வருவதுதான் இவை அனைத்துக்கும் பொதுவான ஓர் உத்தி. இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்தால், முடிக்காமல் கீழே வைக்கவே முடியாது. என்ன பெட்?