|
சொந்த ஊர், திருவண்ணாமலை. படித்தது முதுகலை ஆங்கில இலக்கியம். எழுத்துப்பணி தொடங்கியது கல்கியில். கிழக்கு பதிப்பகத்தில் 2006ம் ஆண்டு உதவி ஆசிரியராக இணைந்தார். இவரது முதல் நூல் திபெத்தின் அரசியல் போராட்ட வரலாறு. ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா தொடங்கி மால்கம் எக்ஸ் வரையிலான புரட்சியாளர்களின் வாழ்க்கை வரலாறுகள் தொடர்ச்சியாக வெளிவந்தன. தற்சமயம், கிழக்கின் ஆசிரியர். கல்கியில் தொடர்ந்து எழுதி வருகிறார். ஆனந்த விகடனில் பாஸ்போர்ட் என்னும் பகுதியில் சர்வதேச அரசியல் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது வலைத்தளம் marudhang.blogspot.com