New Horizon Media Pvt Ltd :: News archive

31-12-2009

சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி

டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை.

இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி, பச்சையப்பா கல்லூரி எதிரில், பூந்தமல்லி ரோடு.

நேரம்: விடுமுறை நாள்களில்: காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை. வேலை நாள்களில்: மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

எங்கள் ஸ்டால்கள்:

கிழக்கு - P 1
நலம் - 451
ப்ராடிஜி மினிமேக்ஸ் - P - 32
ஸ்டால் எண் 38ல் கிழக்கு பதிப்பகத்தின் இலக்கியப் புத்தகங்கள் கிடைக்கும்.

தொடர்புக்கு: காளி பாண்டியன் - 95000-45608

பல்வேறு புதிய புத்தகங்களை வெளியிட்டுள்ளது கிழக்கு பதிப்பகம். வெளியிடப்பட்டுள்ள புத்தகங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள, www.nhm.in/shop வலைத்தளத்தைப் பார்வையிடவும்.


Chennai Book Fair:

From Dec 30 to Jan 10th.

Venue: St George Angelo Indian School, Opp Pachchayappa's College, Poonamallee, Chennai.

Visit us at the following stalls.

Kizhakku - P1
Nalam - 455
Prodigy and MiniMax - P - 32
Kizhakku Literary books are available at Stall No 38.

Please contact Kali Pandian - 95000-45608 for further details.

Please visit www.nhm.in/shop for the new books we have launched.

With warm regards,
Haranprasanna,
Manager - Direct Channels

Send sms START NHM to 575758 to get free SMS alerts on new books updates.

New Horizon Media Private Limited,
33/15 Eldams Road, 2nd Floor,
Alwarpet, Chennai 600 018.
Ph: +91-44-4200-9601/03/04
Mobile: +91-95000 45611 / 98842 79211

05-11-2009

பெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009

பெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009

இடம்:
PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE 

நவம்பர் 6 முதல் 15 வரை.
அரங்கு எண்: 165, 166

பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்கிறது கிழக்கு பதிப்பகம். கிழக்கு பதிப்பகத்தின் நூல்களை நீங்கள் அந்த அரங்குகளில் வாங்கலாம். தன்னம்பிக்கை, அரசியல், வரலாறு, அறிவியல், உடல்நலம், வாழ்க்கை வரலாறு, நாவல், சிறுகதை, நிதி, வணிகம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பார்க்கவும் படிக்கவும் வாங்கவும் ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது கிழக்கு பதிப்பகம்.   

பல்வேறு சிறந்த புத்தகங்களுடன் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை      10% கழிவுடன்   நீங்கள் அங்கே வாங்கலாம்.

மேலதிக விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:   
 
095000-45641 (மணிகண்டன்) மற்றும் 095000-45608 (காளி பாண்டியன்)

09-10-2009

Kizhakku Book Club - Special Discount Offer!

If you are not able to see the image properly, please click here

Send sms START NHM to 575758 to get free SMS alerts on new books updates.

23-09-2009

Kizhakku Book Club - Special Discount Offer!

If you are not able to see the image properly, please click here

Send sms START NHM to 575758 to get free SMS alerts on new books updates.

21-08-2009

சென்னை மறுகண்டுபிடிப்பு : புத்தக வெளியீடு


If you are not able to see the invitation properly, please click here

If you want to buy this book, please click here

Send sms START NHM to 575758 to get free SMS alerts on new books updates.

31-07-2009

ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்

ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2009, காலை 11.00 மணிக்கு, சென்னை, நுங்கம்பாக்கம், லேண்ட்மார்க் (அபெக்ஸ் பிளாஸா) புத்தகக் கடையில், ராமச்சந்திர குஹாவின் ‘India After Gandhi’ புத்தகத்தின் தமிழாகத்தின் முதல் பாகம் வெளியீடு நடைபெற உள்ளது.

குஹா கலந்துகொண்டு புத்தகத்தைத் தான் எழுதியது பற்றி விவரிக்கிறார். ஆ.இரா.வேங்கடாசலபதி புத்தகத்தைப் பற்றியும் அதன் தமிழாக்கத்தைப் பற்றியும் பேசுகிறார்.

இப்பொது வெளியாவது புத்தகத்தின் முதல் பாகம் மட்டுமே. இது 640 பக்கங்கள் (நூலின் பின்குறிப்புகளுடன் சேர்த்து), விலை ரூ. 250. புத்தகத்தின் தமிழ்த் தலைப்பு: ‘இந்திய வரலாறு - காந்திக்குப் பிறகு’.

இந்த முதல் பாகத்தில் மூன்று பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில், இந்தியா சுதந்தரம் பெற்றது; இந்தியப் பிரிவினையும் படுகொலைகளும்; சுதேச சமஸ்தானங்களை இந்திய யூனியனுடன் ஒன்றிணைப்பது; காஷ்மீர் பிரச்னையின் ஆரம்பம்; பிரிவினையின்போது இந்தியா வந்த அகதிகளை குடியமர்த்துவது; இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவது ஆகியவை உள்ளன.

இரண்டாம் பகுதியில் முதல் இந்தியப் பொதுத் தேர்தல்; நேருவின் வெளியுறவுக் கொள்கை; மொழிவாரி மாநிலங்கள் உருவாதல்; அணைகள் கட்டுதல் மற்றும் தொழில்மயமாதல்; சட்டங்களை உருவாக்குதல்; காஷ்மீர் பிரச்னை; வட கிழக்கு பிரச்னை ஆகியவை உள்ளன.

மூன்றாம் பகுதியில், கேரள கம்யூனிச அரசு உருவானது, கலைக்கப்பட்டது; சீனாவுடனான போரும் தோல்வியும்; காஷ்மீரில் அமைதி ஏற்படுதல்; சிறுபான்மையினர் பிரச்னைகள்; நேருவின் மறைவு ஆகியவை உள்ளன.

***

அடுத்த சில மாதங்களில் இரண்டாம் பாகம் வெளியாகும். அதில் நேருவின் மறைவுக்குப் பிறகான இந்திய வரலாறு இருக்கும். அதுவும் சுமார் 600 பக்கங்களுக்கு மேல் வரும். அதுவும் ரூ. 250 விலையாகும்.

28-07-2009

We are back and improved

Dear friend,

Our website (http://nhm.in), shopping site (http://nhm.in/shop) and language software site (http://software.nhm.in) were down for the last 4 days, for maintenance and upgradation activity. We have now improved our hardware and the bandwidth speed. Your experience will now be better than before.

We have also incorporated 'PayPal' payment option for purchases above Rs. 250 in our shopping site. For those of you with the PayPal account, the experience of purchasing will be extremely fast and enjoyable. Of course, you can continue to also use various netbanking and credit card facilities for any amount.

Thank you.

New Horizon Media Pvt Ltd
Phone: 91 44 42009601
Fax: 91 44 4300 9701
URL: http://www.nhm.in

03-07-2009

NHM NEWS LETTER - July 03' 2009

NHM NEWS LETTER

Friday, July 03, 2009

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சிகள் நடக்கும் இடங்கள்

MKB நகர் புத்தகக் கண்காட்சி:

356ஏ, மேற்கு அவென்யூ, எம்.கே.பி. நகர், சென்னை - 39.

தொடர்புக்கு: 95000 45609

(MKB  நகர் புத்தகக் கண்காட்சி ஜூலை 9 வரை நடைபெறும்.)

 

பெரம்பூர் புத்தகக் கண்காட்சி:

ரேவதி ரெடிமேட்ஸ் அருகில்,

140, மாதவரம் ஹை ரோடு, பெரம்பூர், சென்னை - 11.

தொடர்புக்கு: 95000 45643

(பெரம்பூர் புத்தகக் கண்காட்சி ஜூலை 21 வரை நடைபெறும்.)


 

ஆலவாய் பற்றி நரசய்யா

 

 

தமிழில் மதராசபட்டினம் (பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு) என்றும் ஆங்கிலத்தில் Madras : Tracing The Growth of The City Since 1639 (Oxygen Books வெளியீடு) என்றும் சென்னை நகரின் வரலாற்றை எழுதியுள்ள கே.ஆர்.ஏ. நரசய்யா, இப்போது மதுரையின் வரலாற்றை ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை என்ற புத்தகமாக தமிழில் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர்.

நாளை சனிக்கிழமை (4 ஜூலை 2009) மாலை 5.00 மணிக்கு வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் நரசய்யா தான் ஆலவாய் புத்தகத்துக்காகச் செய்த ஆராய்ச்சிகள் பற்றிப் பேச உள்ளார்.

தமிழ்ப் பாரம்பரியம் குழுமம் சார்பாக மாதாமாதம் முதல் ஞாயிறு அன்று நடக்கும் இந்த நிகழ்ச்சி இது.

ஐராவதம் மகாதேவனிடம் சென்று தமிழ் பிரமி எழுத்துக்களைப் படிக்கக் கற்றது, மாமண்டூர், திருப்பரங்குன்றம், அழகர் கோவில், ஆனைமலை சென்று அங்குள்ள கல்வெட்டுகளைப் படித்தது, மதுரைக் கோவில், திருமலை நாயக்கர் மகால், திருவாதவூர், திருமோகூர், ஓவாமலை ஆகிய இடங்களில் செய்த ஆராய்ச்சிகள், ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சாமிநாதய்யர் நூலகம், MIDS, மாவட்டப் பொது நூலகங்கள் ஆகிய இடங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பற்றி நரசய்யா பேசுகிறார்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள:
அ.அண்ணாமலை: gandhicentre@gmail.com; 94441-83198
பத்ரி சேஷாத்ரி: badri@nhm.in; 98840-66566
டி.கே.ராமச்சந்திரன்: tkramachandranias@hotmail.com; 99406-41144
எஸ்.கண்ணன்: 044-2498-5836


Send sms START NHM to 575758 to get free SMS alerts on new books updates.

02-07-2009

நாளை மருத்துவக் காப்பீடு பற்றிய கலந்துரையாடல்

வாராவாரம் வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு பதிப்பகம் நடத்தும் பெர்சனல் ஃபைனான்ஸ் தொடர்பான கலந்துரையாடலில் நாளை, 3 ஜூலை 2009 வெள்ளிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு மருத்துவக் காப்பீடு பற்றி ஞானசுந்தரம் கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்.

இவர் எல்.ஐ.சி நிறுவனத்தின் சேர்மனாக இருந்தவர். கிழக்கு பதிப்பகம் சார்பாக இன்ஷூரன்ஸ் - புதையலா, பூதமா என்ற ஆயுள் காப்பீடு பற்றிய புத்தகத்தையும் Oxygen Books பதிப்பில் Small Print, Big Risk என்ற தலைப்பில் மருத்துவக் காப்பீடு பற்றிய புத்தகத்தையும் எழுதியுள்ளார். இவர் இன்ஷூரன்ஸ் ஆம்பட்ஸ்மேன் ஆகவும் இருந்துள்ளார். இன்ஷூரன்ஸ் துறையில் நிறைய அனுபவம் கொண்டவர்.

கடந்த மூன்று வாரங்களிலிருந்து ஒரு சிறு மாற்றம் இந்த முறை இருக்கும். முதலில் கிருஷ்ணமூர்த்தி சுமார் 30 நிமிடங்கள் இந்தியாவில் கிடைக்கும் மருத்துவக் காப்பீடுகள் பற்றியும் அவற்றின் நிறை குறைகள் பற்றியும் பேசுவார். அதன் பிறகு கலந்துரையாடல்.


அனைவரும் வருக.

இடம் :
கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்பேட்டை,
சென்னை - 600018

நாள்:  3 ஜூலை 2009, வெள்ளிக்கிழமை, மாலை 6.00

Send sms START NHM to 575758 to get free SMS alerts on new books updates.

18-04-2009

NHM BOOK NEWS - APRIL 2009

NHM BOOK NEWS
New Titles - April 2009

New Horizon Media Private Limited
# 33/15, Eldams Road, Alwarpet,
Chennai 600018, Tamil Nadu, India
Ph: 91 44 4200 9601  | Fax: 91 44 4300 9701
Website: www.nhm.in/shop  | Email: support@nhm.in


1857 சிப்பாய் புரட்சி
உமா சம்பத்

 240 பக்கங்கள்.
விலை: ரூ.100

 
978-81-8493-116-7

இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு செய்த வருடம் அது.

1857 புரட்சி திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தன்னெழுச்சியானதா? இதில் மதத்தின் பங்கு என்ன? புரட்சி நசுக்கப்பட்டதன் பின்னணி என்ன? தோல்விக்கு என்ன காரணம்? சிப்பாய் புரட்சியின் ஒவ்வொரு அசைவையும் கண்முன் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் உமா சம்பத்.

ஒவ்வொரு இந்தியரும் நிச்சயம் வாசிக்கவேண்டிய நூல் இது.


விஜயகாந்த்
யுவகிருஷ்ணா

 144 பக்கங்கள்.
விலை: ரூ.70
 978-81-8493-118-1

கறுப்பு என்று ஒதுக்க நினைத்தது திரையுலகம். தி.மு.க., அ.தி.மு.க., தவிர்த்து இன்னொரு சக்தி சாத்தியமில்லை என்று அவநம்பிக்கை அளித்தது அரசியல் வட்டம். ஆகட்டும் பார்க்கலாம் என்று அடியெடுத்து வைத்தார். இன்று இரண்டிலும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அங்கே, கேப்டன். இங்கே கறுப்பு எம்.ஜி.ஆர்.

போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே எட்டு சதவீத வாக்குகளை தேசிய முற்போக்கு திராவிட கழகம் பெற்றபோது, அரசியல் உலகம் நிமிர்ந்து பார்த்தது. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி 2009 நாடாளுமன்றத் தேர்தல் வரை விஜயகாந்தின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாகப் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம்.

மிக எளிமையான தமிழில் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் யுவ கிருஷ்ணா.

 


சாண்டோ சின்னப்பா தேவர்
பா. தீனதயாளன்

 192 பக்கங்கள்.
விலை: ரூ.110
 
978-81-8493-117-4
 

தேவர் திரையுலகில் தனது முதலீடாகச் செய்த விஷயங்கள் மூன்று. எம்.ஜி.ஆர்., முருகர், விலங்குகள்.

எம்.ஜி.ஆரால் தேவர் வளர்ந்தாரா? தேவரால் எம்.ஜி.ஆர். திரையுலக வெற்றிகளைக் குவித்தாரா?

இரண்டுமே நிகழ்ந்தன. யாருமே எளிதில் நெருங்கிப் பழக முடியாத எம்.ஜி.ஆர்., தேவரோடு மட்டும் விடாமல் பாராட்டிய நட்பு ஆச்சரியத்துக்குரியது. என்னால் எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல; யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது.

முதல் அமாவாசையில் பூஜை போட்டு மூன்றாவது அமாவாசைக்குள் முழுபடத்தையும் முடித்துவிடும் அவரது வேகத்தில் கோடம்பாக்கமே கிடுகிடுத்தது. இறுதிவரை வெற்றிக்கொடி நாட்டிய  தயாரிப்பாளரின் கதை இது.


ஐ.ஐ.எம்.
நிர்வாகவியல் கல்லூரி

எஸ்.எல்.வி. மூர்த்தி
 144 பக்கங்கள்.
விலை: ரூ.70
 
978-81-8493-119-8

மற்ற கல்லூரிகளுக்கும் ஐ.ஐ.எம். நிர்வாகக் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு தம்ளர் நீருக்கும் ஒரு கடலுக்கும் உள்ள வித்தியாசம். காரணம், ஐ.ஐ.எம். ஒரு அதிநவீன பயிற்சிப் பட்டறை. அங்கே பாடங்கள் போதிக்கப்படுவதில்லை; விவாதிக்கப்படுகின்றன. விஷயங்கள் திணிக்கப்படுவதில்லை; திறனாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. மிகச் சிறந்த பேராசிரியர்களும் ஆளுமை பெற்றவர்களாக மாறத் துடிக்கும் மாணவர்களும் சங்கமிக்கும் அபூர்வ இடம் அது.

நேரடி அனுபவங்களின் வாயிலாக ஐ.ஐ.எம்.மை அறிமுகம் செய்துவைக்கும் நூலாசிரியர் எஸ்.எல்.வி. மூர்த்தி, ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் பயின்றவர். கடந்த முப்பது வருடங்களாக மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பல ஆலோசனை வகுப்புகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.

If you dont see the newsletter properly, pl click here.

To know about more books, pl click here.

Send sms START NHM to 575758 to get free SMS alerts on new books updates of NHM Books.

09-01-2009

kamadenu.com is now nhm.in/shop

Dear Customers,

kamadenu.com” is now “nhm.in/shop

We are glad to inform you that we have created a new site with a fresh, colorful and feature rich interface. Our new shopping cart is http://www.nhm.in/shop

You can login into our new shopping cart with your existing username(email address) and password.

We will be sending Newsletters to you at regular intervals regarding events, updates and new features.

We value your feedback. Send your feedback to support@nhm.in

Thank you for your continued support.

Send sms START NHM to 575758 to get free SMS alerts on new books updates of NHM Books.